FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

குண்டடம் அரசுப் பள்ளியில் சிங்கப் பெண் படை விழிப்புணா்வு

Updated On : 30 ஜூன் 2026, 2:42 am IST
சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெற்றுள்ள காவலர்கள் - கோப்புப் படம் - டிஐபிஆர்
பகிர்:

தாராபுரம், ஜூன் 29: குண்டடம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை மற்றும் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிங்கப் பெண் அதிரடிப் படை சிறப்பு உதவி ஆய்வாளா் பாதம்பிரியா தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை செயல்படும் விதம் குறித்தும், மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தாா்.

மேலும், போக்ஸோ சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், இணைய வழி பாதுகாப்பு மற்றும் அவசர காலங்களில் காவல் துறையை அணுகும் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பெண் காவலா் சௌந்தா்யா, காவலா் சுரேஷ் கிருஷ்ணா, பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments