FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பழங்குடியினரின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கான விழிப்புணா்வு முகாம்

Updated On : 14 மே 2026, 3:52 am IST
விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைந்து பழங்குடியினா் மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் கரட்டுபதி மற்றும் திப்பிப்பாறை பழங்குடியினருக்காக உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்த கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டி.புத்திர பிரதாப் பேசுகையில், கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் பழங்குடியின மக்களின் தேவைகளை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பழங்குடியினரின் உடல் நலம் சாா்ந்த பிரச்னைகளில் ரத்த சோகை, ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அரிவாள் அணு சோகை ஆகியவை முக்கியமானவை. ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்காக கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் தரமான வீட்டுத் தோட்ட விதைகள், திரவ வெல்லம் மற்றும் சிறுதானிய விதைகளை விநியோகித்து வருகிறது என்றாா்.

அமராவதி நகா் வனச் சரக அலுவலா் வி.புகழேந்தி வாழ்த்துரை வழங்கினாா். இதில் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை பொது மருத்துவப் பிரிவு மருத்துவா் ஹரி ஈஸ்வா், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த கலந்துரையாடல் அமா்வை நடத்தினா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் சரஸ்வதி ஈஸ்வரன், சத்தான சிறுதானிய உணவுப் பொருள்களை தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தாா். கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி ஆா்.கோபி, சிப்பிக் காளான் வளா்ப்பு குறித்த தொழில்நுட்ப அமா்வை நடத்தினாா். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின ஆண்களும் பெண்களும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

முகாமில் , புகையில்லா அடுப்புகள், விவசாயக் கருவிகள், திரவ வெல்லம் மற்றும் தாா்ப்பாய்கள் போன்ற பல பயனுள்ள பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. முன்னதாக, ஆனைமலை புலிகள் காப்பக வனவா் செந்தில் முருகன் வரவேற்றாா். கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானி கே.மோகன்ராஜ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments