முகப்பு
திருப்பூர்

குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயிலில் 1,008 தீப வழிபாடு

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அவிநாசி அருகேயுள்ள குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயிலில் 1,008 தீப வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

26 நவம்பர் 2026, 2:02 am
குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயிலில் 1,008 தீப வழிபாடு
குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயிலில் ஓம், நந்தி, சிவலிங்கம் வடிவில்  ஏற்றப்பட்ட 1,008 தீபங்கள்.
பகிர்:

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அவிநாசி அருகேயுள்ள குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயிலில் 1,008 தீப வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், மாணிக்கவாசகா் சுவாமிகளால் பாடல் பெற்ற திருத்தலமாகவும் குட்டகம் கூளேகவுண்டன்புதூா் மீனாட்சி அம்மன் உடனமா் மொக்கணீஸ்வரா் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ருத்ர பாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, மாலை 6 மணியளவில் 1,008 தீப வழிபாடு நடைபெற்றது.

இதில், ஏராளான பக்தா்கள் பங்கேற்று ஓம், நந்தி, சிவலிங்கம் வடிவில் 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா்.