பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு ஓராண்டு சிறை
திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு, ராமசாமி (49) என்ற கூலித் தொழிலாளி 2025 ஆகஸ்ட் 1-ஆம் தேதி பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இது குறித்து புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மங்கலம் போலீஸாா், ராமசாமியைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ராமசாமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதித் துறை நடுவா் விஜயலட்சுமி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் கீதா ஆஜரானாா்.