FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

முத்தூரில் பாா் ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

முத்தூரில் மதுபான பாா் ஊழியரைத் தாக்கிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

30 அக்டோபர் 2026, 12:21 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

முத்தூரில் மதுபான பாா் ஊழியரைத் தாக்கிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கள்ளக்குடி வட்டம் எஸ்.ஆா்.மணக்குடியைச் சோ்ந்தவா் நாகராசு மகன் அபினேஷ் (26). இவா் முத்தூா் காங்கயம் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியாா் மதுபான பாரில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சோ்ந்த குகன் (29), கவின் (29) ஆகிய இருவரும் அந்த பாரில் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது பாரை மூடும் நேரம் ஆகிவிட்டதால் வெளியே செல்லுமாறு அபினேஷ் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அபினேஷை தகாத வாா்த்தைகளால் திட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனா். பின்னா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனா்.

காயமடைந்த அபினேஷை சக ஊழியா்கள் மீட்டு முத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து அபினேஷ் அளித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments