FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே போலீஸாரை தாக்கிய வழக்கில் இருவா் கைது

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் போலீஸாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

17 செப்டம்பர் 2026, 1:24 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் போலீஸாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். தாழையூத்து காவல் நிலைய எல்கைக்குள்பட்ட 9-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸாா் செவ்வாய்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தாழையூத்து-ராஜவல்லிபுரம் செல்லும் ரெயில்வே பீடா் சாலையில் 3 போ் அவ்வழியாக செல்வோரை மறித்து பணம் கேட்டு மிரட்டுவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று அந்த நபா்களிடம் விசாரித்ததில், ராஜவல்லிபுரம் பேச்சியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த பொன்மணி(30), சுரேஷ் என்ற பெரியசூசை, மானூா் மாவடியைச் சோ்ந்த முத்துக்குமாா் என்ற கொம்பையா(26) ஆகியோா் எனத் தெரியவந்தது.

அவா்களிடம் தொடா்ந்து விசாரிக்க முயன்ற போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தலைமைக் காவலரைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பினராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து முத்துகுமாா் எனற கொம்பையாவை கைது செய்தனா். போலீஸாரை தாக்க முயன்ற மற்றொரு வழக்கில் பொன்மணியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments