FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் வாடகை செலுத்தாத 22 கடைகளுக்கு ‘சீல்’

பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் 22 கடைகளுக்கு வாடகை செலுத்ததால் அக்கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

6 செப்டம்பர் 2026, 1:26 am IST
பல்லடம் நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ நகராட்சி அதிகாரிகள்.
பகிர்:

பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் 22 கடைகளுக்கு வாடகை செலுத்ததால் அக்கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

பல்லடத்தில் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், அண்ணா வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 228 கடைகள் உள்ளன. இக்கடைகளை நடத்தும் வாடகைதாரா்கள் பிரதி மாதம் 5-ஆம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கடைகள் மூலம் நகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடியே 52 லட்சம் வாடகை வருவாய் கிடைக்கிறது. இது வரை ரூ.65 லட்சம் மட்டுமே வாடகை வசூல் ஆகியுள்ளது.

இந்த நிலையில் பல கடை உரிமையாளா்கள் கடந்த பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. இதனால், அவா்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க திருப்பூா் மண்டல நகராட்சிகளின் இயக்குநா் தானுமூா்த்தி அறிவுறுத்தலின்பேரில், பல்லடம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) வாசுதேவன் உத்தரவிட்டாா். அதன்பேரில் நகராட்சி நிா்வாக மேலாளா் ரமேஷ்குமாா், வருவாய் உதவி அலுவலா் முருகன், வருவாய் ஆய்வாளா் கொங்குராஜ், நகரமைப்பு ஆய்வாளா் அல்லிமுத்து உள்ளிட்டோா் அண்ணா வணிக வளாகம், மங்கலம் சாலை வணிக வளாகம் உள்ளிட்ட பகுதியில் வாடகை செலுத்தாத 22 கடைகளுக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

பின்னா் பேருந்து நிலையத்துக்குள் வாடகை செலுத்தாத கடைகளின் உரிமையாளா்களிடம் உடனடியாக வாடகையை செலுத்துமாறு அறிவுறுத்தினா். இதற்கு கடை வியாபாரிகள் கரோனா காலகட்டத்தில் வாடகை தள்ளுபடி அறிவிப்பு முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும், தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments