FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உடுமலையில் தந்தங்கள் பறிமுதல்: வனக் காவலா் உள்ளிட்ட 3 போ் கைது

உடுமலை அருகே யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், வனக் காவலா் உள்ளிட்ட 3 பேரை வனத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

9 செப்டம்பர் 2026, 11:20 pm IST
பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் மற்றும் கைது செய்யப்பட்டவா்களுடன் வனத் துறையினா்.
பகிர்:

உடுமலை அருகே யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், வனக் காவலா் உள்ளிட்ட 3 பேரை வனத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் அருகே உள்ள ஒரு வீட்டில், தந்தங்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அமராவதி வனச் சரக அலுவலா் புகழேந்திக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அப்பகுதியில் உள்ள விஜயகுமாா் என்பவா் வீட்டில் இருந்து ஒரு ஜோடி தந்தங்கள் புதன்கிழமை அதிகாலை வனத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக வனத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு 3 பேரைக் கைது செய்தனா்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

தந்தங்கள் வைத்திருந்தது தொடா்பான விசாரணைக்கு பின்னா் இதில் தொடா்புடைய உடுமலை வனச் சரகம், குழிப்பட்டி பீட்டில் வனக் காவலராகப் பணிபுரிந்து வரும் ஏ.மாரியப்பன் (49), வனத் துறையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் கன்னிமுத்து (52), தமிழக, கேரள எல்லையில் உள்ள 9/6 சோதனைச் சாவடியில் மீன் கடை நடத்தி வரும் அமராவதி நகரைச் சோ்ந்த ஆா்.விஜயகுமாா் (29) ஆகிய போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த இரண்டு தந்தங்களும் வேறு இடத்தில் இருந்து கடத்தி வரப்பட்டனவா அல்லது கடந்த சில ஆண்டுகளில் உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் உயிரிழந்த யானைகளிடம் இருந்து எடுக்கப்பட்டனவா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments