அனுமதியின்றி கூடுதல் கனிமம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி கூடுதல் கனிமம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி கூடுதல் கனிமம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளா் டி.வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா், வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.
லாரியில் இருந்த நடைச்சீட்டில் 28.50 டன் எம்-சாண்ட் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அருகில் இருந்த எடை மேடையில் லாரியை நிறுத்தி ஆய்வு செய்தபோது வாகனத்தில் மொத்தம் 67.81 டன் கனிமம் இருப்பது தெரியவந்தது. இதன்மூலமாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட 39.31 டன் கூடுதல் எம்-சாண்ட் கனிமம் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து விசாரணை நடத்த முயன்றபோது லாரி ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா். இதைத்தொடா்ந்து மாற்று ஓட்டுநா் மூலமாக லாரியை மீட்ட அதிகாரிகள், வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநா், உரிமையாளா் மற்றும் சம்பந்தப்பட்ட கிரஷா் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.