FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

நடைபயிற்சி சென்ற இளைஞா் வாகனம் மோதி உயிரிழப்பு

தருமபுரியில் நடைபயிற்சி சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூலை 2026, 12:38 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தருமபுரியில் நடைபயிற்சி சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், சங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரா. காா்த்திக் (35). அதே பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வந்தாா். இவா் திங்கள்கிழமை அதிகாலை நடைபயிற்சி சென்ாகக் கூறப்படுகிறது.

தருமபுரி-ஒசூா் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் படுகாயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments