"அனுபவமே ஒரு சிறந்த மனிதரை உருவாக்கும்'
அனுபவமே ஒரு சிறந்த மனிதரை உருவாக்கும் என காஞ்சிபுரம் சமுத்பவா சேவாசிரம அறக்கட்டளையின் நிறுவனர் மாதாஜி ஸ்ரீமத் ஸ்ரீவிஸ்வமாதா தெரிவித்தார்.
அனுபவமே ஒரு சிறந்த மனிதரை உருவாக்கும் என காஞ்சிபுரம் சமுத்பவா சேவாசிரம அறக்கட்டளையின் நிறுவனர் மாதாஜி ஸ்ரீமத் ஸ்ரீவிஸ்வமாதா தெரிவித்தார்.
அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆன்மிகமும், புரிந்துணர்வும் எனும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம், இ.ஆர்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர். செல்வராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், மாதாஜி ஸ்ரீமத் ஸ்ரீ விஸ்வமாதா பேசியதாவது:
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் முதலில் உடல் ஆரோக்கியம் குறித்து நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டுமே நாம் எந்தச் செயலையும் செய்ய முடியும். ஒவ்வொருவரும் புதுமைகளை கற்கும் ஆர்வமும், படைப்பாற்றல் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இளமையில் இருந்தே மன நிலையை ஒருமுகப்படுத்தும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறரைத் தெரிந்து கொள்வதைவிட நம்மைப் பற்றி நாமே நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவத்தை யாரும் காற்றுத் தர முடியாது. அனுபவமே ஒரு சிறந்த மனிதரை உருவாக்கும். ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஆற்றலை உணர வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றார் அவர். இந்தக் கருத்தரங்கில் இ.ஆர்.கே. கல்லூரி முதல்வர் த. சக்தி, அரூர் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் செல்வபாண்டியன், நிர்வாக அலுவலர் சி. அருள்குமார், பேராசிரியர்கள் எம். சிவக்குமார், அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.