FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சூரிய எரிசக்தி பூங்காக்கள் நிறுவ ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டத்தில் சூரிய எரிசக்தி பூங்காக்கள் நிறுவ ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்புவிடுத்துள்ளார்.

Updated On : 26 ஜூன் 2018, 7:47 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் சூரிய எரிசக்தி பூங்காக்கள் நிறுவ ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் 500 மெகாவாட் அளவுக்கு ஒருங்கிணைந்த சூரிய எரிசக்தி பூங்காக்களை நிறுவ தமிழ்நாடு எரிசக்தி முகமைக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பூங்காக்கள் 50 மெகாவாட் முதல் அமைக்கப்படும். சில குறிப்பிட்ட நிலைகளில் 50 மெகாவாட்டுக்கும் குறைவான பூங்காக்கள் அமைக்கவும் பரிசீலிக்கப்படும்.
சிறு விவசாயிகள் குழுக்கள், சுய உதவிக்குழுக்கள், ஊராட்சிகள், விவசாய சங்கங்கள் இதற்குத் தேவையான நிலங்களை குத்தகைக்கு வழங்கலாம். தனித்தோ, இணைந்தோ நிலத்தை வழங்குவதற்கான கடிதங்களை வழங்க வேண்டும். நிலங்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நிலையான ஆண்டு வருவாயைப் பெறலாம்.
இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தங்களது விருப்பத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி அலுவலகங்களிலும் நேரில் சென்று தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட உதவிப் பொறியாளரை 7708064704 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments