பூச்சாண்டி காட்ட வேண்டாம்
நேருவுக்கே கருப்புக் கொடி காட்டிய திமுகவிடம் தமிழக ஆளுநர் பூச்சாண்டி காட்ட வேண்டாம் என திமுகவின் முதன்மைச் செயலர் துரை முருகன் தெரிவித்தார்.
நேருவுக்கே கருப்புக் கொடி காட்டிய திமுகவிடம் தமிழக ஆளுநர் பூச்சாண்டி காட்ட வேண்டாம் என திமுகவின் முதன்மைச் செயலர் துரை முருகன் தெரிவித்தார்.
தருமபுரியில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒரு முறை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சென்று சந்தித்தபோது, "தமிழ்நாட்டில் அமைச்சர்கள் அவர்களின் பணியை சரிவரச் செய்யாததால் நான் ஆய்வு செய்யப் போகிறேன்; நீங்கள் எதிர்க்கட்சி, போராட்டம் நடத்துகிறீர்கள்' என்று எங்களிடம் அவர் தெரிவித்தார்.
ஆனால், இப்போது ஆளுநரின் பணியைத் தடுத்தால் சிறைத் தண்டனை என்கிறார்கள். நாங்கள் நேருவுக்கே கருப்புக் கொடி காட்டியவர்கள். எங்களிடம் பூச்சாண்டி காட்ட வேண்டாம். கைது செய்தால் அதனை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்றார் துரை முருகன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.