FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பாப்பாரப்பட்டி தேர் விபத்து: சிகிச்சை பெற்று வந்த நால்வரில் ஒருவர் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி காளியம்மன் திருவிழா தேரோட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்துள்ளார்.

Updated On : 17 ஜூன் 2022, 2:51 pm IST
சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெருமாள்.
பகிர்:

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி காளியம்மன் திருவிழா தேரோட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதே அள்ளி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவின் போது நடந்த தேரோட்டத்தின்போது சக்கரத்தின் அச்சாணி முறிவு ஏற்பட்டு தேர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (57), பிலப்ப நாயக்கன் அள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணன் (50) ஆகிய இருவர் உயிரிழந்தும், படுகாயமடைந்த மாதே அள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேஷ், பெருமாள், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன்,மாதேஷ் ஆகிய நால்வரும் அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 என நால்வருக்கு ரூ.2,00,000 காசோலைகளை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கி, ஆறுதல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக குப்பன் மகன் பெருமாள் (53) சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது தேர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நால்வரில், ஒருவர் உயிரிழந்த நிலையில், அரசின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments