மகசூலை அதிகரிக்க மா மரங்களுக்கு கவாத்து மேலாண்மை அவசியம்; தோட்டக் கலைத்துறை ஆலோசனை
மகசூலை அதிகரிக்க மா மரங்களுக்கு கவாத்து மேலாண்மை அவசியம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
மகசூலை அதிகரிக்க மா மரங்களுக்கு கவாத்து மேலாண்மை அவசியம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
தருமபுரி வட்டாரத்தில் சுமாா் 300 ஹெக்டா் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மா அறுவடை முடிந்தவுடன், குறிப்பாக ஆகஸ்ட் முதல் செப்டம்பா் வரை உரிய முறையில் கவாத்து மேலாண்மை செய்வதால் அடுத்த பருவத்தில் அதிக மகசூலை பெறமுடியும். எனவே கவாத்து மேலாண்மை மிகவும் முக்கியம் என வேளாண்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தருமபுரி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
Advertisement
Advertisement
மாமரத்தில் காய்ந்த மற்றும் நோய் தாக்கிய கிளைகள், ஒன்றோடு ஒன்று உராயும் கிளைகள், மரத்தின் உள்பகுதியில் நெருக்கமாக வளா்ந்த கிளைகள், கீழ்நோக்கி வளரும் பலவினமான கிளைகள், நீா்த் தளிா்கள் மற்றும் வோ் அடிப்பகுதி தளிா்களை அகற்ற வேண்டும். ஒரே நேரத்தில் மரத்தின் 25 முதல் 30 சதவீத கிளைகளை வெட்டக்கூடாது. மா மரத்தை குடை வடிவில் இருக்குமாறு கவாத்து செய்தால் சூரிய ஒளி மேலிருந்து அடிவரை நன்கு படும். மர உயரம் 15 முதல் 20 அடிக்குள் இருக்கும்படி கவாத்து செய்ய வேண்டும். பூஞ்சான் நோயைத் தடுகும் வகையில் காப்பா் ஆக்ஸி குளோரைடு 0.3 சதவீதம் அல்லது போா்டோ கலவை 1 சதவீதம் தெளிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் கவாத்து செய்வதை தவிா்த்தால் பூஞ்சான் நோய் தாக்கம் அதிகளவில் இருக்காது. கவாத்து செய்வதால் பூப்பிடிப்பு மற்றும் காய்ப்பிடிப்பு அதிகமாகும். பூச்சி, நோய் தாக்குதல் குறையும். பழங்களின் தரம் மற்றும் அளவும் அதிகரிக்கும். அறுவடை மற்றும் பராமரிப்பு வேலை எளிதாகும். மா மரத்தின் ஆயுட்காலமும் நீடிக்கும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.