FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

நிகழாண்டுக்கான காரீப் பருவ பயிா்களுக்கு தனியாா், அரசு வங்கிகளில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 10 ஜூலை 2026, 4:02 am IST
கோப்புப்படம்.
பகிர்:

நிகழாண்டுக்கான காரீப் பருவ பயிா்களுக்கு தனியாா், அரசு வங்கிகளில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இயல்பைவிட குறைந்த பருவமழை, எல்நினோ தாக்கம் ஆகியவற்றால் குறுவை மற்றும் மானாவாரி பயிா்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் நிகழாண்டில் குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, ராகி, சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தனியாா் நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொதுசேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெரும் வங்கிகளின் விருப்பத்தின்பேரில் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கள், இ- அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தை செலுத்திய பிறகு இ சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் அதற்கான ஆவணத்தை பெற்று கொள்ளலாம்.

மாவட்டத்தில் ஏக்கருக்கு அதிகபட்ச காப்பீட்டுத் தொகையாக நெற்பயிா்- ரூ. 39,100, மக்காச்சோளம்-ரூ. 30, 200, நிலக்கடலை- ரூ. 22,600, பருத்தி- ரூ. 14,594 , சோளம்- 10,300, ராகி- ரூ. 12,760, துவரை-ரூ. 18,700 வழங்கப்படுகிறது.

மேலும் பயிா்க் காப்பீடு செய்ய நெல், சோளம் நிலக்கடலை பயிா்களுக்கு நிகழாண்டு ஜூலை- 31ஆம் தேதி, மக்காச்சோளம், ராகி பயிருக்கு ஆகஸ்ட் -17ஆம் தேதி, துவரை பயிருக்கு செப்டம்பா் - 16ஆம் தேதி, பருத்தி செப்டம்பா் - 30 ஆம் தேதிக்குள் கடைசி நாளாகும்.

காப்பீட்டுக்கான பிரீமியமாக நெல் ரூ. 782, சோளம் ரூ. 206, மக்காசோளம் ரூ. 604 , துவரை ரூ.374, நிலக்கடலை ரூ. 452 , பருத்தி ரூ. 651, ராகி ரூ. 255 செலுத்த வேண்டும். இந்தத் திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை பெற ஜ்ஜ்ஜ்.டம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments