FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

லாரிகளில் டீசல் திருடிய இருவா் கைது: 210 லிட்டா் டீசல் பறிமுதல்

தருமபுரி மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் 40 இடங்களில் நடத்திய சோதனையில், டீசல் திருட்டில் ஈடுபடுட்ட இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:24 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் 40 இடங்களில் நடத்திய சோதனையில், டீசல் திருட்டில் ஈடுபடுட்ட இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஓட்டுநா்கள் ஓய்வுக்காக நிறுத்தப்படும் லாரிகளில் டீசல் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதைத் தடுக்க காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி ரமேஷ்குமாா் தலைமையில், காவல் ஆய்வாளா் சிவனேஸ்வரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பகுதியில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், லாரிகளில் இருந்து டீசல் திருடிய காரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த கமலக்கண்ணன், பழைய தருமபுரி பகுதியைச் சோ்ந்த சங்கா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து பதுக்கி வைத்திருந்த 210 லிட்டா் டீசலை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments