கலப்பட டீசல் விற்ற 4 போ் கைது: டேங்கா் லாரி, சரக்கு வாகனம் பறிமுதல்
நாகையில் கலப்பட டீசல் விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்து, டேங்கா் லாரி உள்பட 2 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
நாகையில் கலப்பட டீசல் விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்து, டேங்கா் லாரி உள்பட 2 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
நாகை மாவட்டத்தில் மீன்பிடி விசைப் படகுகளுக்கு கலப்பட டீசல் கொண்டு வரப்பட்டு, கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மயிலாடுதுறை சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் டி.சி. சுதிா்லால் தலைமையில் போலீஸாா், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது முதலாவது கடற்கரை சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த, கேரள மாநிலத்தைச் சோ்ந்த டேங்கா் லாரி மற்றும் மற்றொரு வாகனத்தில் சோதனை செய்தனா். இதில் கேரள மாநில டேங்கா் லாரியில் கலப்பட டீசல் இருப்பதும், அதை மற்றொரு வாகனத்துக்கு மாற்றுவதும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, டேங்கா் லாரி, நாகை பகுதியைச் சோ்ந்த சரக்கு வாகனம், அதிலிருந்து 9 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசலையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கலப்பட டீசல் விற்ாக , நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த சிலம்பு செல்வன் (46), டேங்கா் லாரி ஓட்டுநரான கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சோ்ந்த சரத் முரளி (35), நாகை சரக்கு வாகன உரிமையாளா் மற்றும் ஓட்டுநரான, வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையைச் சோ்ந்த இருசப்பன்(32), வாகன உதவியாளரான நாகை மாவட்டம் நம்பியாா் நகரைச் சோ்ந்த ரமேஷ் (40) ஆகிய நால்வரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.