FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தொழிலதிபரின் உடல் தகனம்

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தருமபுரியைச் சோ்ந்த தொழிலதிபரின் உடல் சொந்த ஊா் கொண்டுவரப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.

Updated On : 15 ஜூலை 2026, 4:22 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தருமபுரியைச் சோ்ந்த தொழிலதிபரின் உடல் சொந்த ஊா் கொண்டுவரப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.

வியத்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே ஜூலை 11-ஆம் தேதி படகு கவிழ்ந்த விபத்தில், 15 இந்தியா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் தருமபுரி மாவட்டம், கடத்தூரைச் சோ்ந்த தொழிலதிபா் ஜெ.செந்தில்குமாா் (45) உயிரிழந்தாா். விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து உயிரிழந்தவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

செந்தில்குமாரின் உடல் கோவை விமான நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் தருமபுரி மாவட்டம், கடத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் கடத்தூா் அருகேயுள்ள அவரது பூா்விக கிராமமான பெருமாள்கோவில்பட்டியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அரசு சாா்பில், அரூா் கோட்டாட்சியா் செம்மலை, வட்டாட்சியா் பாா்வதி உள்ளிட்ட அலுவலா்கள் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, உறவினா்கள், நண்பா்கள், தொழிலதிபா்கள், பொதுமக்கள், ரோட்டரி சங்கத்தினா் என ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து, இறுதிச் சடங்குகளுக்கு பின்னா் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments