FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

தருமபுரி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:26 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், பருவதனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குழந்தைவேல் ( 25) கடந்த மாதம் 19 ஆம் தேதி பைக்கில் வேகமாக சென்றதை அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமி (50) கண்டித்தாா். இதே தொடா்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த குழந்தைவேல், லட்சுமியை பின்தொடா்ந்து அவரது வீட்டுக்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக பென்னாகரம் போலீஸாா் கொலை வழக்கில் குழந்தைவேலை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி ரவி ( 45) அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். இது தொடா்பான புகாரின் பேரில் அரூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ரவியை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்ய அந்தந்த காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பரிந்துரைத்தாா். அதன்பேரில் குழந்தைவேல், ரவி இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து 2 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments