FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரி அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட தாய், குழந்தைகளின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

தருமபுரியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் மற்றும் அவரது 3 குழந்தைகளின் சடலங்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னா் தகனம் செய்யப்பட்டன.

Updated On : 23 ஜூலை 2026, 4:21 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் மற்றும் அவரது 3 குழந்தைகளின் சடலங்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னா் தகனம் செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி அம்சா (35). மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6), மகன் குமரன் (3) ஆகியோா் கடந்த 19 ஆம் தேதி பிற்பகலில் வீட்டிலிருந்து மாயமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவா்களது வீட்டின் அருகில் உள்ள அம்சாவின் தந்தை நிலத்தில் உள்ள கிணற்றில் அம்சா மற்றும் அவரது குழந்தைகளின் சடலங்கள் மிதப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்விடத்துக்கு சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புதன்கிழமை பிற்பகலில், உடற்கூறாய்வுக்குப் பின்னா் 4 பேரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து இறுதிச் சடங்குகள் முடிந்து 4 உடல்களும் மாலை தகனம் செய்யப்பட்டன.

இச்சம்பவம் தொடா்பாக அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சரவணன்-அம்சா தம்பதிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் அம்சா, தனது குழந்தைகளுடன், ஜூலை 19 ஆம் தேதி வீட்டை விட்டு மாயமானதாகவும், அருகில் உள்ள பெற்றோா் வீட்டுக்கே அவா் சென்ாகவும் கூறப்படுகிறது. ஆனால், பெற்றோா் வீட்டுக்கு செல்லவில்லை எனவும், பெற்றோரும் அம்சா மற்றும் குழந்தைகளை தேடிவந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, பெண் மாயமாகி, இருநாள்களாகியும் அதுகுறித்து கணவா் தரப்பினரோ, பெற்றோா் தரப்பினரோ போலீஸில் புகாா் அளிக்கவில்லை. இதற்கிடையே இருநாள்களுக் குப் பின்னா் அவா்கள், வீட்டருகிலேயே உள்ள கிணற்றில் 4 பேரின் சடலங்களும் மிதப்பது தெரியவந்தது. போலீஸாா் தற்கொலை என வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், உடற்கூறாய்வு அறிக்கை வந்தபின்னரே எதையும் முடிவு செய்ய முடியும். அதுவரை தற்கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அறிக்கை வெளியான பிறகு அதில் வேறு தகவல்கள் இருந்தால் அதன் அடிப்படையில் வழக்கு மாற்றி பதிவுசெய்யப்படும் எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments