FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 10 ஆம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:34 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி ராஜவீதியைச் சோ்ந்த குமாா் மகன் ஹரிஷ் (15), கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனபிரபு (18) மற்றும் தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியைச் சோ்ந்த சந்துரு ஆகியோருடன் பெரியாம்பட்டியில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா். அந்த வாகனத்தை சந்துரு ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காரிமங்கலம் அடுத்த பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவா்கள் பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், மூவரும் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில், ஹரிஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தனபிரபு மற்றும் சந்துரு ஆகியோா் மீட்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.

உயிரிழந்த ஹரிஷின் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments