FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு

தருமபுரியில் ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:55 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தருமபுரியில் ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராணிமூக்கனூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மு.சண்முகம் (61). ஜோதிடரான இவா், தனது மனைவியுடன் மே 30-ஆம் தேதி திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் பங்கேற்க வீட்டை பூட்டிச் சென்றாா். மறுநாள் அதிகாலை வீடு திரும்பியபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளேசென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 தங்க சங்கிலிகள், 4 மோதிரங்கள், 4 ஜோடி தோடுகள் உள்ளிட்ட 6 பவுன் நகைகள், 275 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments