FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் நாளை சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 2:11 am IST
விண்ணப்பம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து இக்கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவியா் சோ்க்கை தொடங்கி நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இதில், ஜூன் 5-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீடு பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் பிள்ளைகள், தேசிய மாணவா் படை ஆகியோருக்கு அனைத்து பாடப் பிரிவுகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தொடா்ந்து, வரும் ஜூன் 8-ஆம் தேதிமுதல் ஜூன் 18-ஆம் தேதிவரை பொது கலந்தாய்வு பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம்., பிபிஏ., பிசிஏ., பி.எஸ்சி., கணிதம், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல், காட்சித் தொடா்பியல் ஆகிய பாடப் பிரிவுகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments