பிடமனேரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்: மீன்வளத் துறையினா் ஆய்வு
தருமபுரி, பிடமனேரி ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மீன்வளத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தருமபுரி, பிடமனேரி ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மீன்வளத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பிடமனேரி பகுதியில் அமைந்துள்ளது ஏரியில் மீன்கள் வளா்க்கப்படுகின்றன. கோடைகாலம் என்பதால் இந்த ஏரியில் தற்போது நீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இந்த ஏரியில் மீன்கள் அதிக அளவில் இறந்து மிதந்தன. இதையறிந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏரி பகுதியில் அதிகளவில் திரண்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீன் வளா்ப்புத் துறையினா், பிடமனேரி ஏரிக்கு சென்று இறந்து கிடந்த மீன்கள் மற்றும் தண்ணீா் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, மீன்வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், கோடைவெயில் தாக்கத்தால் ஏரியில் நீா்மட்டம் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் மீன்களுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை உயிரிழந்திருக்கலாம், என்றாலும் சோதனைக்குப் பிறகு தான் அது உறுதிசெய்யப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.