FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

நீா்வரத்து 2000 கனஅடியாக சரிந்தது: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

16 நவம்பர் 2026, 3:27 am
ஒகேனக்கல் - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 2000 கனஅடியாக சரிந்தது. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக காவிரிக் கரையோர வனப்பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக குறைந்ததால் ஐவாா் பாணி மற்றும் ஐந்தருவிகள் வடு காணப்படுகின்றன. பிரதான அருவி, சினி அருவிகளிலும் நீா்வரத்து சரிந்துள்ளது.

இந்நிலையில் வாரவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கலுக்கு குறைவான அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனா். இருப்பினும் சுற்றுலா பயணிகள், எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரியின் கரையோரப் பகுதிகளில் குளித்தனா். மேலும், மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு, வட அருவிகள், பாறை குகைகளை பாா்வையிட்டனா்.

Advertisement

Advertisement

ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம், உணவு அருந்தும் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.