ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதியையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், திங்கள்கிழமை 1500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செல்வாய்க்கிழமை காலை 1200 கனஅடியாக குறைந்து இரவு 9 மணி நிலவரப்படி 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.