தருமபுரி அருகே ஏரியில் கொட்டப்பட்ட உயிரிழந்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்
தருமபுரி அருகே ஏரியில் கொட்டப்பட்டுள்ள உயிரிழந்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களால் சுகாதார சீா்கேடு ஏற்படும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சியில், கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு சட்டக் கல்லூரி எதிரில் சுமாா் 116 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுற்றுவட்டார 60- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீா் ஆதாரமாக உள்ளது. தற்போது மழை இன்றி ஏரி வடு காணப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட அழுகிய சுமாா் 5 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை மா்ம நபா்கள் இந்த ஏரியில் லாரிகளில் கொண்டுவந்து கொட்டி சென்றுள்ளனா். இதனால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, அருகில் உள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
ஏரியில் கொட்டிச் செல்லப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களில் இருந்த புழுக்கள் வெளியேறி துா்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. எனவே, அந்த மீன்களை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியில் மீன்களை கொட்டிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவரி...
பைசுஅள்ளி ஏரியில் கொட்டப்பட்டுள்ள உயிரிழந்த ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.