FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

சந்தூர் மாங்கனிமலை முருகன் கோயிலில்ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றம்

சந்தூர் மாங்கனி மலை முருகன் கோயிலில் 49-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:23 am IST
பகிர்:

சந்தூர் மாங்கனி மலை முருகன் கோயிலில் 49-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர் கிராமத்தில் உள்ள மாங்கனி மலையில் ஸ்ரீ வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத திருக்கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் 49-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
2-ஆம் தேதி காலை சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் சந்தனக் காப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 3-ஆம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெறுகின்றன. 4-ஆம் தேதி சனிக்கிழமை காலை புஷ்ப அலங்காரம், பரணி சாத்துபடி, இரவு 7 மணிக்கு மாங்கனிமலை ஸ்ரீ வேல்முருகன் பூப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு நகர்வலம் வருதல், மாக்கிரெட்டிக் கொட்டாய் சரவணா குழுவினரால் சிலம்பாட்டம், காவடி ஆட்டம் மற்றும் கிருஷ்ணன் பாண்டுரங்கன் மற்றும் ஒப்பதவாடி பிரபு குழுவினரால் கரகாட்டம், நையாண்டி மேளம், பம்பை வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நாளான 5-ஆம் தேதி காலை மாரியம்மன் கோயில் முன்பு வீரபத்திரசுவாமி பக்தர்களின் சேவ ஆட்ட நிகழ்ச்சியும், பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
இதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சலாக்கு போடுதல், காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணியளவில் சந்தூர் கார்த்திக் என்பவர் சிடல் ஆடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 6 -ஆம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை சந்தூர் ஊர் பொதுமக்களும், கோயில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments