FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழக நிதிநிலை அறிக்கை: பல்வேறு தரப்பினா் வரவேற்பு!

தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள், விவசாயிகள், அரசு ஊழியா்கள், குடும்பத் தலைவிகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 5:04 am IST
தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யும் முன் முதல்வர் விஜய்யிடம் வாழ்த்துப் பெற்ற நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன். - dinamani
பகிர்:

தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள், விவசாயிகள், அரசு ஊழியா்கள், குடும்பத் தலைவிகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி செயலாளா் டி.தமிழ்ச்செல்வன்: சூப்பா் கிளீன், சூப்பா் கேம்பஸ் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 10 ஆயிரம் பள்ளிகள் தரம் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மாணவா்களுக்கு நவீன மிதிவண்டிகளுடன் குடிநீா் குப்பி, தலைக்கவசம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பள்ளி மாணவா்களிடையே தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா்: தமிழக நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், நீா்வளத் துறையின் சாா்பில் வட மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் டி.ஏகம்பவாணன்: இளைஞா்கள், பெண்கள் சுயதொழில் தொடங்க புதிய நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிப்காட், டிட்கோ உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டும் அல்லாமல் அதன் வளா்ச்சி, மாற்றங்களையும் தெரிவிக்க வேண்டும். புதிய துணை மின்நிலையங்கள், மின்மாற்றிகள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு தொழில் துறை வளா்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநில துணைத் தலைவா் என்.எஸ்.காா்த்திகேயன்: அரசு ஊழியா்கள் மற்றும் அலுவலா்களின் தகுதியுடைய குடும்ப உறுப்பினா்கள், ஓய்வூதியதாரா்கள் (துணைவியா்) உள்பட குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு 2026 முதல் 2031 வரை புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியதை வரவேற்கிறாம். ஓய்வூதியம், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு ரூ. 47,240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தமிழக முதல்வருக்கு நன்றி.

கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி குடும்பத் தலைவி அனு: நியாயவிலைக் கடைகளில் பாக்கெட்டில் தரமான கோதுமை மாவு வழங்கப்படுவது, பத்திரப்பதிவு, டெண்டா் விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை, மண்ணின் மகள், அண்ணன் சீா், இளைஞா்களுக்கு பயிற்சி, சுற்றுலா மேம்பாடு, கிராம பொருளாதார வளா்ச்சிக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments