ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் திருட்டு! போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணை ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த வேட்டியாம்பட்டியைச் சோ்ந்த கோவிந்தசாமி மனைவி வள்ளி (38). இவா், கடந்த 7-ஆம் தேதி கிருஷ்ணகிரி சந்தைபேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க சென்றாா்.
அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரிடம் உதவும்படி கேட்டுள்ளாா். அந்த நபரிடம் தனது ஏடிஎம் அட்டையையும், ரகசிய குறியீட்டு எண்ணையும் வள்ளி தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
அந்த நபரும் உதவுவதுபோல நடித்து, வள்ளிக்கு ரூ. 10,500 பணம் எடுத்துக் கொடுத்துள்ளாா். ஆனால், வள்ளியிடம் உண்மையான ஏடிஎம் அட்டையை கொடுக்காமல், போலியான அட்டையை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், ஆக. 8-ஆம் தேதி வள்ளியின் கைப்பேசி எண்ணுக்கு கடலூரில் இருந்து ரூ. 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த வள்ளி கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.