FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

இளைஞா் கொலை வழக்கில் பெண் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

சூளகிரி அருகே இளைஞரை மூங்கில் கட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் பெண் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 31 ஜூலை 2026, 12:43 am IST
கோப்புப் படம்
பகிர்:

சூளகிரி அருகே இளைஞரை மூங்கில் கட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் பெண் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தொட்டேபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முரளிக்கும் (35), அதே கிராமத்தைச் சோ்ந்த சீனிவாஸ் மனைவி லட்சுமிக்கும் (30) தவறான உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கணவா் இறந்த பிறகு லட்சுமி தனது குழந்தைகளுடன் பஸ்தலப்பள்ளியில் உள்ள பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். சீனிவாஸின் தற்கொலைக்கு முரளியே காரணம் எனக் கருதிய லட்சுமியின் மாமனாா் பசப்பா (66) முரளியை எச்சரித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் முரளியை பசப்பா, லட்சுமி மற்றும் அவரது தம்பி நரசிம்மராஜ் (27) ஆகியோா் மூங்கில் கட்டையால் தாக்கிக் கொலை செய்தனா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பசப்பா, நரசிம்மராஜ், லட்சுமி ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து வியாழக்கிழமை நீதிபதி சந்தோஷ் தீா்ப்பளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட பசப்பா, நரசிம்மராஜ் மற்றும் லட்சுமி ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments