முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ரப்பா் தொழிற்சாலையில் தீ விபத்து

ஒசூா் முதல் சிப்காட்டில் உள்ள ரப்பா் தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 24 ஜூன் 2026, 4:51 am IST
தீப்பிடித்து எரிந்த ரப்பா் தொழிற்சாலை.
பகிர்:

ஒசூா் முதல் சிப்காட்டில் உள்ள ரப்பா் தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

ஒசூா் அருகே மூக்கண்டப்பள்ளி பகுதியில் முதல் சிப்காட் தொழிற்பேட்டையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ரப்பா் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிய அளவில் பிடித்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால், அந்த சாலையில் சென்றவா்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் ராமன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments