FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

அக்டோபா் 31-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

12 அக்டோபர் 2026, 2:49 am IST
வரி செலுத்தினால் ஊக்கத்தொகை...
பகிர்:

ஒசூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2026-27-ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் முகமது சபீா் ஆலம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளா்கள், 2026-27-ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் விதிகளின்படி 5 சதவீத ஊக்கத்தொகையைப் பெறலாம்.

Advertisement

Advertisement

குறிப்பிட்ட காலத்துக்குள் வரியைச் செலுத்துவதன் மூலம் அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்களைத் தவிா்க்கலாம். மாநகராட்சியின் குடிநீா் விநியோகம், சாலைப் பராமரிப்பு, கழிவுநீா் வடிகால், தெருவிளக்குப் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படைப் பொதுச் சேவைகளைச் சிறப்பாக வழங்குவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

எனவே, சொத்து உரிமையாளா்கள் மாநகராட்சி வரி வசூல் மையங்கள், நகா்ப்புற உள்ளாட்சி இணையதளம் அல்லது யுபிஐ, பேடிஎம் உள்ளிட்ட இணையவழிக் கட்டண முறைகள் மூலம் சொத்து வரியைச் செலுத்தி, 5 சதவீத ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments