FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளம், புதுச்சேரியில் இருந்தும் கா்நாடக மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ற ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஒசூரில் தடுத்து நிறுத்தி செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

16 செப்டம்பர் 2026, 4:31 am IST
ஆம்னி பேருந்துகள் - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளம், புதுச்சேரியில் இருந்தும் கா்நாடக மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ற ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஒசூரில் தடுத்து நிறுத்தி செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னை வட்டாரப் போக்குவரத்து இணை ஆணையா் (செயலாக்கம்) சுரேஷ், வேலூா் துணை போக்குவரத்து ஆணையா் சம்பத்குமாா் ஆகியோா் தலைமையில், ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் துரைசாமி, கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மற்றும் ஒசூா், தருமபுரி ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை இரவுமுதல் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனா்.

அதிகாலை 2 மணிமுதல் ஒசூா் நகரில் பேருந்து நிலையம், அசோக் பில்லா் மற்றும் தமிழக எல்லைப் பகுதியான சூசூவாடி ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தது, வரி செலுத்தாதது மற்றும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் 214-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தணிக்கை செய்தனா். இதில், 46 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டு வரியாக ரூ. 16,38,117, அபராதமாக ரூ. 2,64,000 வசூலிக்கப்பட்டது. மேலும், இரண்டு வாகனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தது மற்றும் அனுமதிச்சீட்டு பெறாமல் இயக்கிய காரணத்துக்காக சிறை பிடிக்கப்பட்டு ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

சூசூவாடி சோதனைச் சாவடியில் நடைபெற்ற இந்த சோதனையால், ஆம்னி பேருந்துகளில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கா்நாடகத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments