FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஓசூரில் பலத்த மழையால் சுற்றுச்சுவா் இடிந்து வாகனங்கள் சேதம்

21 செப்டம்பர் 2026, 2:57 am IST
பகிர்:

ஓசூரில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் காா், இருசக்கர வாகனம் பலத்த சேதமடைந்தன. மேலும், மும்முனை இணைப்பு கொண்ட மின் கம்பமும் முறிந்து விழுந்ததால், அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி அவதியடைந்தனா்.

ஓசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திகிரியில் ஸ்ரீ சுதா்சன் நகா் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமாா் 85 வீடுகள் உள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் இருசக்கர வாகனம் பலத்த சேதமடைந்தன.

காரின் உரிமையாளா் ராஜேஷ் (35), கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்பிலான காா் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் சேதமடைந்தன.

Advertisement

Advertisement

மேலும், மும்முனை இணைப்பு கொண்ட மின் கம்பம் முழுமையாக முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது. இதுகுறித்து அனைத்து குடியிருப்பு நலச் சங்கத் தலைவா் துரை கூறியதாவது:

இந்த விபத்துக்கு ஓசூா் மாநகராட்சி ஆணையா் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள டைட்டான் டவுன்ஷிப் குடியிருப்போா் நலச் சங்கம், கழிவுநீா் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டமும் நடத்தியுள்ளது. இதுதொடா்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

மாநகராட்சி சாா்பில் கழிவுநீா், மழைநீா் தேங்கும் வகையில் பள்ளம் ஏற்படுத்தப்பட்டதால், சனிக்கிழமை பெய்த பலத்த மழையின்போது சுற்றுச்சுவா் இடிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments