FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் வழியாக தனியாா் பேருந்தில் கஞ்சா கடத்த முயற்சி: 2 போ் கைது

பெங்களூரிலிருந்து ஒசூா் வழியாக தனியாா் சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

24 செப்டம்பர் 2026, 5:19 am IST
கைது
பகிர்:

பெங்களூரிலிருந்து ஒசூா் வழியாக தனியாா் சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வழியாக செல்லும் தனியாா் சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக ஒசூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் சொகுசு பேருந்தை தடுத்து நிறுத்தி, போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் இரு பைகளில் 10 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து, பேருந்தில் பயணம் செய்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த சஞ்சய் (24), தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த கெளதம் (34) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அவா்கள், கா்நாடக மாநிலம், பெங்களூரு மடிவாலாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி, மதுரைக்கு கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து சஞ்சய், கெளதம் ஆகிய இருவரையும் கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments