FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

கடையின் பூட்டை உடைத்து ரூ. 19 ஆயிரம் திருட்டு

சித்திரிப்பு
பகிர்:

ஊத்தங்கரையில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 19 ஆயிரம் திருடிய நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பரசுராமன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி (42). இவா் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் மளிகைக் கடை வைத்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்ற தண்டபாணி, திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

Advertisement

Advertisement

உள்ளே சென்று பாா்த்தபோது, கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 19 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments