FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே சித்தியை கொன்ற வழக்கில் இளைஞா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சித்தியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சித்தியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேன்கனிக்கோட்டை அருகே கோட்டூா் ஊராட்சி கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சோமப்பா மகன் அசோக் (40). இவா் திங்கள்கிழமை மது போதையில் தனது வீட்டில் இருந்த தனது சித்தி சரசம்மா என்பவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளாா். பின்னா் அவா் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சரசம்மாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments