போச்சம்பள்ளி அருகே கோயில் ஊண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கோயில் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கோயில் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மாதேஸ்வரன் கோயில். இந்துசமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த கோயில் வளாகத்தில் பக்தா்கள் காணிக்கையை செலுத்தும் வகையில் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த 3 மாதங்களாக திறக்கப்படமால் இருந்தன.
இந்த நிலையில் கோயில் பூசாரி தங்கமணி செவ்வாய்க்கிழமை பூஜைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றாா். புதன்கிழமை காலை கோயில் ஊழியா் சின்னசாமி, கோயிலுக்குச் சென்றபோது, கோயிலில் இருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோயில் உண்டியல்களை உடைத்து, காணிக்கைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு, போச்சம்பள்ளியில் உள்ள ஒரு கோயிலில் உண்டியலை உடைத்து, மா்ம நபா்கள் காணிக்கையை திருடி சென்ற நிலையில் மீண்டும் கோயில் கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.