பள்ளிபாளையத்தில் 25 ஆயிரம் பெண்கள் ங்கேற்ற பிரம்மாண்ட பால்குட விழா
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில், பள்ளிபாளையத்தில் 25 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில், பள்ளிபாளையத்தில் 25 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்று ஊர்வலமாகச் சென்று, கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் நடந்த பாலாபிஷேக பூஜையில் பங்கேற்றனர்.
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், பிப்ரவரி 24 ஆம் தேதியன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், பெண்களுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளித்தல், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், மூன்று நாள்கள் தொடர் யாக பூஜை போன்றவை நடத்தி அன்னதானம் வழங்குதல் என பல்வேறு கொண்டாட்டங்கள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதன் ஒரு பகுதியாக பள்ளிப்பாளையம் பகுதியில் மாவட்ட அதிமுக சார்பில், 25 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பால்குட ஊர்வலம் மற்றும் கோயிலில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் அம்மா உணவகம் முன்பாக தொடங்கிய ஊர்வலம் குமாரபாளையம் சாலை, ஒட்ட மெத்தை, சங்ககிரி சாலை, பேருந்து நிலையம் போன்ற நகரின் முக்கிய வீதிகள் வழியாக கண்ணனூர் மாரியம்மன் கோயிலை சென்றடைந்து.
அங்கு முதல்வர் பிறந்த நாளைத் தொடர்ந்து அவர் நீடூழி வாழவும், மீண்டும் முதல்வராக வேண்டியும் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், செல்வகுமார சின்னைய்யன், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.