FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ஆக.7-இல் மாநில அளவிலான கலைப் போட்டிகள்

நாமக்கல்லில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:45 am IST
பகிர்:

நாமக்கல்லில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 4 இடங்களில் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் வரும் 7-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 
இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா தலைமை வகித்து, கலைப் போட்டிகள் நடத்த ஆசிரியர்கள் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் மாவட்டக் கல்வி அலுவலர் அருளரங்கன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments