FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உறுப்பு தான விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
 டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை பொதுநல அமைப்பின் சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் வி.வாசுதேவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூர் சிவசுப்பிரமணியன், கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
 தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு பார்வையற்றவர்கள் இயல்பு நிலை மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குமாரபாளையத்தை அடுத்த வேமங்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர் கௌரி, அமைப்புத் தலைவர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments