FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

விவசாயிகளுக்கு நீரா பானம் உற்பத்தி பயிற்சி

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் நீராபானம் உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 7 ஜூன் 2018, 9:46 am IST
பகிர்:

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் நீராபானம் உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
 பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் 40 விவசாயிகளுக்கு பரமத்தி வேலூர் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் ராஜு பயிற்சி அளித்தார். இதில் நீராபானம் உற்பத்தி, அதை பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
 பரமத்தி வேளாண் துறை சார்பில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் முறையை அறிந்து கொள்வதற்காக விவசாயிகளை கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் உள்ள காளிபாளையத்தில் இயற்கை முறையில் 30 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வரும் விவசாயி பெரியசாமியின் தோட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இயற்கை உரங்களான தொழு உரம், புண்ணாக்கு, பசுந்தாள் உரம், அமிர்த கரைசல். பஞ்சகாவ்யம் ஆகியவற்றை தயார் செய்வது மற்றும் அதை பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டிருந்த மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி, ராகி, மக்காச்சோளம் மற்றும் மரவள்ளி பயிர்களை நேரில் பார்வையிட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
 பயிற்சி மற்றும் இயற்கை விவசாய சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாபு, தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜோதிமணி, ரவீனா ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments