அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு
"நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் அரசுக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் அரசுக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சக்தி தலைமை வகித்தார். கல்வியை மத்தியத்துவப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். "நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண இலவச அனுமதி அட்டை வழங்க வேண்டும். பொதுக்கல்வியைப் பாதுகாக்க வேண்டும்.10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.