சிறந்த ஆங்கில உச்சரிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு
குமாரபாளையம் நாராயணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறந்த ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் சிறப்பிடம்
குமாரபாளையம் நாராயணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறந்த ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்பள்ளியில் விடியல் ஆரம்பம் அமைப்பு மற்றும் வெஸ்ட்வேலி இங்கிலிஸ் சவுண்ட் அகாதெமி சார்பில் ஆங்கில உச்சரிப்பு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்பட்டு வந்தன.
இதையடுத்து, சிறந்த ஆங்கில உச்சரிப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். சண்முகம் வழங்கினார். தலைமையாசிரியர் பாரதி வரவேற்றார்.
அமைப்புத் தலைவர் ஆர். பிரகாஷ், நிர்வாகிகள் ராஜகுரு, ஜீவானந்தம், பூபதி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.