FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு  பரமத்திவேலூர் தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில்  பூக்களின் விலை அதிகரித்தது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு  பரமத்திவேலூர் தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில்  பூக்களின் விலை அதிகரித்தது.
பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன.
இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்குக் கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 500-க்கும், முல்லைப் பூ ரூ. 400-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், அரளி ரூ. 100-க்கும், ரோஜா கிலோ ரூ. 150-க்கும், செவ்வந்திப்பூ  ரூ. 100-க்கும்
ஏலம் போனது.
புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,200-க்கும், முல்லை பூ கிலோ ரூ. 850-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 600-க்கும், அரளி ரூ. 200-க்கும், ரோஜா  ஒன்று ரூ. 200-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 200-க்கும் ஏலம் போனது. விநாயகர்  சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments