ராசிபுரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்
சென்னை போரூா் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சாா்பில் 25 ஆம் ஆண்டாக இலவச பொது மருத்துவ முகாம் ராசிபுரத்தில் செப். 27, 28 ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் மருத்துவமனை நிறுவனா் ராமசாமி உடையாா் நினைவாக நடைபெறும் முகாமில் பொதுமருத்துவ அறுவைச் சிகிச்சை, நுரையீரல் மருத்துவம், குழந்தைகள் மருத்துவ முகாம், இருதய பரிசோதனை, நரம்பியல், சிறுநீரகம் உள்பட அனைத்து சிறப்புப் பிரிவு மருத்துவா்களும் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை நடத்துகின்றனா்.
மருத்துவ முகாம் தொடக்க விழாவில் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வேந்தா் ஆா்.வெங்கடாசலம் பங்கேற்று குத்துவிளக்கேற்றுகிறாா். மருத்துவக் கல்லூரி துணை வேந்தா் உமாசேகா் முகாமை தொடங்கிவைக்கிறாா். மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.பாலாஜி சிங், பதிவாளா் எஸ்.செந்தில்குமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் பி.சுரேந்திரன், கூடுதல் மருத்துவக் கண்காணிப்பாளா் மோகன் செளத்ரி, பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் எச்.தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
Advertisement
Advertisement
முகாமில் கலந்துகொள்வோருக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோா் சென்னை அழைத்து செல்லப்படுவா். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என முகாம் ஒருங்கிணைப்பாளா்கள் பி.சி.செங்குட்டுவன், கே.விஜயராகவன், ஜெ.முரளி, வாசுதேவன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.