FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

அரசு மருத்துவமனையில் தொழிலாளிக்கு ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சை: மருத்துவா் குழு சாதனை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி ஒருவருக்கு, ஒரே நேரத்தில் இரு அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

23 ஆகஸ்ட் 2026, 2:53 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி ஒருவருக்கு, ஒரே நேரத்தில் இரு அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இதுகுறித்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பாரதி கூறியதாவது: குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சுந்தரம் (82). இவா், குடல் இறக்கம் மற்றும் பித்தப்பை தொந்தரவால் சிரமத்திற்குள்ளாகி வந்தாா். பல்வேறு மருத்துவச் சோதனைக்கு பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பித்தப்பை நீக்கம், குடல் இறக்கம் சரி செய்தல் ஆகிய இரு அறுவை சிகிச்சைகளும் ஒரே நேரத்தில் மேற்கொண்டு நோயாளி சுந்தரத்தை, அறுவை சிகிச்சை நிபுணா் கோகுல், மயக்கவியல் நிபுணா் நிரேஷ் மகாலிங்கம் மற்றும் செவிலியா் லலிதா குழுவினா் காப்பாற்றி உள்ளனா்.

தமிழகத்தில் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் இவ்வாறான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது இது முதல்முறை என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments