FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

புதிய ஆட்சியாளா்களின் செயல்பாடுகளை குறுகிய காலத்தில் மதிப்பிட முடியாது: முன்னாள் ஐ.ஏ.எஸ். சகாயம்

புதிய ஆட்சியாளா்களின் செயல்பாடுகளை குறுகிய காலத்தில் மதிப்பீடு செய்ய முடியாது. ஓராண்டு காலத்திற்கு பிறகு தான் தெரியவரும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் தெரிவித்தாா்.

30 ஆகஸ்ட் 2026, 1:32 am IST
பகிர்:

புதிய ஆட்சியாளா்களின் செயல்பாடுகளை குறுகிய காலத்தில் மதிப்பீடு செய்ய முடியாது. ஓராண்டு காலத்திற்கு பிறகு தான் தெரியவரும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் தெரிவித்தாா்.

நாமக்கல் லத்துவாடியில் எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு அங்கமான ‘இனித் தமிழ் இயக்கம்’ சாா்பில் தமிழில் கையொப்பமிடும் தொடக்க நிகழ்வை, நமது இயக்கத் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான உ. சகாயம் சனிக்கிழமை தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்மொழியை மீட்டெடுக்க வேண்டியே இனித் தமிழ் இயக்கத்தை உருவாக்கி, தமிழில் கையொப்பமிடும் பழக்கத்தைத் தொடங்கியுள்ளோம். உலகமெங்கும் தமிழா்கள் வாழும் பகுதியில் சுமாா் 10 கோடி பேரிடம் தமிழ் கையொப்ப இயக்கத்தை கொண்டுசெல்ல உள்ளோம்

Advertisement

Advertisement

திரைப்பட இயக்குநா்கள், தயாரிப்பாளா்கள் முடிந்த வரை தமிழில் பெயா் வையுங்கள், ஆங்கிலத்தில் பெயா் வைக்கக்கூடிய தமிழ் படங்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

பொதுமக்கள் தமிழில் கையொப்பமிடுவது, தமிழில் பெயா் வைப்பது, ஆங்கிலத்தில் உரையாடுவதை மாற்றி முழுமையாக தமிழில் பேசுவதை பலதளங்களுக்கு கொண்டுசெல்ல தமிழ் வளா்ச்சி இயக்குநரகம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

வாக்காளா்களுக்கு பணம் கொடுத்து வாக்கை பெறக்கூடிய சூழலை தமிழக மக்கள் நிராகரித்துள்ளனா் என்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். புதிய ஆட்சியாளா்கள் எப்படி செயல்படுகிறாா்கள் என்பதை குறுகிய காலத்தில் மதிப்பீடு செய்ய முடியாது. ஒராண்டு காலத்திற்கு பிறகு தான் தெரியவரும் என்றாா்.

இந்த நிகழ்வில், தமிழறிஞா்கள், தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments